29 / 06 / 2016 - Wednesday header add

அம்மா திட்ட முகாமில் ரூ.50 கட்டாய வசூல்

main-img-1 வருவாய்த்துறை சார்பில் அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்கும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரேஷன் கார்டு, பட்டா, நிலவரி, சொத்துவரி, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சமூக நலத்துறையின் கீழ் வரும் புகார்கள் உட்பட மாநகராட்சி மற்றும் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளை ஒரே இடத்தில் முகாமாக நடத்தி அங்கேயே குறைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்க்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமைதோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. சென்னையில் மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, மாம்பலம், கே.கே.நகர், எழும்பூர், பெரம்பூர் பகுதியில் வசிப்பவர்களுக்கென 5 மையங்களில் இந்த முகாம்கள் நேற்று நடந்தன.

பொதுவாக, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனு வட்டாட்சியர் அளவிலான குழுக்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியவைக்கு அன்றைய தினமே சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. முகாமில் மனுக்கள் மீதான சான்றிதழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், சென்னையில் உள்ள மயிலாப்பூர், மாம்பலம், எழும்பூர் ஆகிய வட்டத்தில் கணினி மூலம் சான்றிதழ் வழங்குவதாக கூறினர். சான்றிதழ் வாங்க வந்த பொதுமக்களிடம் திடீரென ரூ.50 செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, அந்தந்த வட்டார அலுவலகம் சார்பில் ஒட்டப்பட்டு இருந்தன. முகாமில் திடீரென பணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் சான்றிதழ் பெற வந்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் சிலர் முறையிட்டனர்.

ஆனால், அவர்கள் கணினி மூலம் சான்றிதழ் வழங்கப்படுவதால் கட்டாயம் ரூ.50 தர வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால், வேறு வழியில்லாமல் முகாமுக்கு வந்தவர்கள் பணத்தை செலுத்தி சான்றிதழை பெற்று சென்றனர். இதுகுறித்து முகாமுக்கு வந்த பொதுமக்கள் கூறும்போது, சான்றிழை எளிதாகவும், இலவசமாகவும் பெறுவதற்காக அம்மா திட்டம் முகாம் நடத்தப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், முகாமில் திடீரென கணினி மூலம் சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறி ரூ.50 வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இதனால், மக்களின் நலன்கருதி அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நல்ல திட்டங்கள் ஒரு சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களால் அதன் பயனை அடைய முடியாமல் போய்விடுகிறது என்றனர்.

பெயர், விலாசத்தில் பிழை கலெக்டரிடம் முறையீடு

ஆழ்வார்பேட்டை சமூக நல கூடத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் சென்னை மாவட்ட கலெக்டர் சரியாக 12.41 மணியளவில் திடீர் விசிட் அடித்தார். அப்போது முகாமில் முதியவர் ஒருவர் வருமான சான்றிதழ் பெற்று திரும்பி சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி முகாம் தொடர்பாக விசாரித்து விட்டு கலெக்டர் அனுப்பி வைத்தார். இந்நிலையில், அதிகாரிகளிடம் கலெக்டர் பேசி கொண்டிருக்கும் போது அந்த முதியவர் திடீரென திரும்பி வந்து சான்றிதழில் பெயர், விலாசம் தவறாக பதிவு செய்துள்ளனர். உடனடியாக மாற்றி தருமாறு கலெக்டரிடமே கோரினார். இதனால், அதிர்ந்து போன அதிகாரிகள் நிலைமையை சமாளிக்க சான்றிதழை பெற்று கொண்டு புதிதாக மீண்டும் திருத்தம் செய்து கொடுத்தனர். இதற்கிடையே மயிலாப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதாக எண்ணி பொதுமக்கள் பலர் முகாமிற்கு வந்தனர்.

இணையதள கோளாறு

மயிலாப்பூர் 123வது வார்டு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மாரடைப்பு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் இவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வருமான சான்றிதழ் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மா திட்ட முகாம் மூலம் சான்றிதழ் பெற அவரது உறவினர் ஒருவர் வந்தார். இணையதள கோளாறு காரணமாக சான்றிதழை உடனடியாக பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், முகாமை ஆய்வு செய்த கலெக்டர் சுந்தரவல்லியிடம் இது தொடர்பாக முறையிட்டார். அதன்பிறகு கலெக்டர், அதிகாரிகளிடம் உடனடியாக வழங்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு சான்றிதழை பெற்று சென்றார்.

மேலும்
right-add-1
main-mid-add
main-img-2

சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.19-

ஏழை, எளிய மக்களுக்கு தினமும் குறைந்த விலையில் தரமான உணவு வகைகள் வழங்குவதற்காக சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சென்னை மாநகராட்சியின் மலிவு விலை சிற்றுண்டி உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகளை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். இதுதவிர, சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து, சிறிது காலம் தங்கி செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவர்கள் அனைவரும் தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம் செலவு செய்ய முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு இவர்கள் அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சிப் பகுதியில், சென்னை மாநகராட்சியின் மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் தொடங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம் அருகில் புதிதாக சிற்றுண்டி உணவகம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு, புதிய சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைக்கிறார். அதே நேரத்தில் மேலும் 14 இடங்களில் புதிதாக தொடங்கப்படும் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களுக்கான கல்வெட்டினையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைக்கிறார். சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிற்றுண்டி உணவகத்தைத் தொடங்கி வைத்ததும், 15 சிற்றுண்டி உணவகங்களும் ஒரேநேரத்தில் செயல்படத் தொடங்கும்.

சென்னை மாநகராட்சியின் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திட்டத்திற்காக மாதந்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி உணவகங்களில், இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இந்த சிற்றுண்டி உணவகம் மூலம், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், தள்ளு வண்டி, கை வண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் பயன் அடைவார்கள்.

மேலும்
main-img-2

கடல் நீரை விடவும் அதிக உப்பு உள்ள நீரோட்டம்- செவ்வாய் கிரகத்தில் நீரோட்ட ஆதாரம்?

அண்டார்டிகாவில் உள்ள, மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் உள்ளது டான் ஜுவான் நீர்நிலை. சாக்கடலைக் காட்டிலும் இந்த நீரில் உப்பு அதிகம் உள்ளது, உலகிலேயே அதிக உப்புத் தன்மை உள்ள நீராதாரம் இதுவே, இதனால்தான் துருவப்பகுதியில் இருந்தும் இந்த நீர் உறையாமல் உள்ளது. இந்த நீர் ஆதாரத்தின் தன்மைகளை ஆய்வு செய்கையில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் சூட்சுமமாக தெரியவருகிறது என்று அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிளவுண்ட, வறண்ட உப்புத் தன்மையிலான மண் விண்வெளியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இதனால் இந்தக் குளம் உரையாமல் இருக்கச் செய்வதாக இந்த விஞ்ஞானிகள் புகைப்படங்களை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதனுடன் பனி உருகுவதால் வரும் புதிய நீரும் சேர்கிறது. இதனால்தான் உலகின் துருவக் கடுங்குளிர், பனிப்பகுதியிலும் இந்த நீராதாரம் உறைந்து போகாமல் இருக்கிறது.

இந்த வறண்ட பள்ளத்தாக்குகள் அதில் உள்ள நீராதாரம், செவ்வாய் கிரகத்தில் உள்ள உறை வறட்சிப் பாலைவனம் ஆகியவற்றிற்கு இடையே நிலவியல் ஒற்றுமைகள் இருப்பதற்கான சாத்தியங்களை இந்தப் புகைப்படங்கள் வழங்குகின்றன. இதனால் செவ்வாயில் கடந்த காலத்தில் ஏன் இப்போதும் கூட நீர் இருப்பதற்கான ஆதாரங்களை நாம் நிரூபிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

இது பற்றிக் கூறிய பாஸ்டன் பல்கலை ஆய்வாளர் ஜேம்ஸ் டிக்சன் "இந்த நீரோட்டத்தை கடந்த 2 மாதங்களாக 16,000 புகைப்படங்கள் எடுத்தோம். எந்தப் பக்கமாக நீரோட்டம் இருக்கிறது என்பதை பார்த்தோம். இதனை பிற கண்க்கீடுகளுடன் ஒப்பிட்டோம் அவ்வளவே! என்றார்.

இந்தப் படங்களின் மூலம் தெரியவந்தது என்னவென்றால், தினசரி அதிகபட்ச வெப்ப நிலையில் இந்த நீர்நிலையில் தண்ணீர் துடிப்புகளாக அதிகரித்தது. நண்பகல் சூரியனால் உருகிய பனி நீர் இதற்குக் காரணம். ஆனாலும் இந்த புதிய நீரின் வருகை நீர்நிலையில் அதிகபட்ச உப்புத்தன்மை பற்றி விளக்கிடவில்லை. சாக்கடலை விடவும் 8 மடங்கு உப்புத் தன்மை அதிகம் உள்ளது இந் நீர்நிலை. இதற்கு காரணம் என்னவென்பதை மற்ற புகைப்படங்களை வைத்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நீர்நிலையின் மேற்குப்பகுதியில் தளர்வான படிவுகள் இருந்தது இரண்டாவது ஆதரமாக சிக்கியது. இந்த படிவுகளில் கால்சியம் குளோரைடு உப்பு அதிகம் இருப்பது முந்தைய ஆய்வில் தெரியவந்தது.

இரண்டாவது படம் மூலம் காற்றில் சார்பு ரீதியான ஈரப்பதம் வடிந்திறங்கும்போது நீர்ச்சுவடுகள் மண்ணில் உருவானது தெரியவந்தது. பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த நீர்நிலையின் வடக்கு மலைமுக்ட்டுப் பகுதியிலும் இதேபோன்ற நீர் சுவடுகள் தெரிந்தன. இந்த சுவடுகளை உருவாக்குவது என்னவெனில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை மண் உறிஞ்சுகிறது. நீர்த்திவலைகள் கொண்ட அந்த உப்புகள் தளர்ந்த மண்ணில் மெதுவாக வழிகிறது. அதாவது கீழே உள்ள உறைபனிவரை இந்த நீர்த்திவலைகள் செல்வதை காண முடிகிறது. பிறகு எப்போதாவத் பனி உருகும்போது இந்த உப்பை பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

1961ஆம் ஆண்டு இந்த டான் ஜுவான் நீர்நிலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நிலத்தடி நீர்தான் இது என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த புதிய ஆதாரம் அந்தப் பழைய கோட்பாட்டை உடைத்துள்ளது.

இதனை மாதிரியாகக் கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் உள்ள குளிரான, வறண்ட பாலைவனங்கள் பற்றி ஊகிக்க வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த காலத்திலும் ஏன் இப்போது கூட ஓடும் நீர் செவ்வாய் கிரகத்தில் இருப்பதற்கான ஆதாரத்திற்கு இதனை சாட்சியமாக பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

சமீபமாக செவ்வாய் கிரகத்திலிருந்து வந்துள்ள படங்க்கள் டான் ஜுவான் நீர்நிலையில் கண்டுபிடித்த நடைமுறை இருப்பதற்கான சாத்தியங்களை நிறையவே உருவாக்கியுள்ளது.

சுருக்கமாக அண்டார்டிகாவில் கண்ட அதே டான் ஜுவான் மாதிரி நீர்நிலை செவ்வாயில் இருக்கிறது என்பதே இவர்களது வாதம்.

இந்த கட்டுரை நேச்சர் இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இணையதளம் மூலம் வெளிப்படும் CO2-ன் அளவு 830 மில் டன்!
சாண்டி, காத்ரினா, ஐரீன் மிகப்பெரிய புயல்களும் அமெரிக்கா கண்டும் காணாத உண்மைகளும்!
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலநடுக்கம் - ஆய்வு
ஆர்ட்டிக் பகுதியில் கச்சா, எரிவாயு சுரண்ட முதலாளிய முதலைகளின் போட்டி- 2015-இலேயே ஆர்ட்டிக் கடல் பனியற்ற கடலாக மாறும் அபாயம்!
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும்
செவ்வாய் கிரகம், நீர்நிலை, அண்டார்டிகா, அமெரிக்க விஞ்ஞானிகள்

மேலும்
main-img-2

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்:

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி

பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

மேலும்
main-img-2

பயிற்சி போட்டி "டிரா'

சென்னை: ஆஸ்திரேலியா, இந்தியா "ஏ' அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி "டிராவில்' முடிந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கு முன், சென்னையில் நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் (மூன்று நாள்) இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் இந்தியா "ஏ' அணி 451 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஹென்ரிக்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். பின் வந்த பீட்டர் சிடில் (2), ஸ்டார்க் (11) நிலைக்கவில்லை. நாதன் லியான் "டக்-அவுட்'டானார். மாத்யூ வேட் (44) ஆறுதல் அளித்தார். தோகர்டி 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு சுருண்டு "பாலோ ஆன்' பெற்றது.
வாட்சன் அபாரம்:
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு வாட்சன் (60) அரை சதம் விளாசினார். கோவனும் தன் பங்கிற்கு அரை சதம் அடித்து, 53 ரன்களில் வெளியேறினார். ஹியுஸ் (19) நிலைக்கவில்லை. அடுத்து வந்த உஸ்மான் கவாஜா (30*), வேட் (19) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து போட்டி "டிராவில்' முடிந்தது.

மேலும்